இந்திய வனப்பணி தேர்வில் கடந்த 2022-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களுடன் சுற்றுசூழல் அமைச்சர் மதிவேந்தன், ஆந்திர மாநிலத்தில் மாவட்ட வன அதிகாரியாக பணி புரியும் ஜி.ஜி. நரேந்திரன், ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ். டி.வைஷ்ணவி உள்ளிட்டோர். 
தமிழகம்

ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று இந்திய வனப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய வனப்பணி தேர்வில் கடந்த 2022-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து இந்திய அளவில் வெற்றிபெற்ற 102 மாணவர்கள் இதில் பாராட்டப்பட்டனர். இதற்கு சுற்றுசூழல் அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். இதேபோல் 2016-ல் இந்திய வனப்பணி தேர்வில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தில் மாவட்ட வன அதிகாரியாக பணி புரியும் ஜி.ஜி. நரேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மதிவேந்தன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசும்போது தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வன வளங்களை பாதுகாப்பதில் எடுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். சதுப்பு நிலங்கள் பாதுகாப்பில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும் இந்தியாவிலேயே கடல்வள பாதுகாப்புக்கு சிறப்பு படை ஏற்படுத்திய முதல் மாநிலமும் தமிழகம்தான் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக அளவில் பெண்களில் முதலிடம் பெற்ற வைஷாலி உள்ளிட்ட சாதனை மாணவர்கள் அனைவருக்கும் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் விருது வழங்கப்பட்டது. விழாவில் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ். டி.வைஷ்ணவி வரவேற்புரை வழங்கினார்.

முதலிடம் பெற்ற வைஷாலி ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உதவித்தொகை பெற்று பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் தேர்ச்சிபெற்ற மொத்தம் 147 பேரில் 102 பேர் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். தேர்வு பெற்ற அனைவரையும் அமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT