தமிழகம்

ஆடிக் கிருத்திகை விழா: அரக்கோணம் ரயில் திருத்தணி வரை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரைஇயக்கப்படும் 3 ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படுகிறது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது. எனவே, பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள், ஆக.8 (நேற்று)முதல் 11-ம் தேதி வரை திருத்தணிக்கு நீட்டித்து இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரலில் காலை 8.20 மணி, அரக்கோணத்தில் இருந்து மதியம் 12.58 மணி, மாலை 2.58 மணிக்கு புறப்படும் ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT