சென்னை: கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள்பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பேரிடரில்பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவரை அவருக்குவேலை வழங்கப்படவில்லை. சுதந்திர தின விழாவின்போது மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசுவேலைக்கான உத்தரவை வழங்குமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். கரோனா தொற்றுஉச்சத்தில் இருந்த அந்த கடினமான தருணத்தில், அரசுமருத்துவர்கள் உறுதுணையாக இருந்ததை யாராலும்மறக்க முடியாது.
அதனால், நீண்டகாலமாக போராடி வரும் அரசு மருத்துவர்களுக்கு, மறைந்த முன்னாள்முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ன்படிஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.