‘‘வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை நீடிக்கும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலா மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், போரூர், அமைந்தகரை, வடபழனி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது.
''வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக் கூடும். சென்னை நகரை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று வலுவாக இருக்கும்'' என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் கூறியுள்ளார்.