தமிழகம்

விடுதலைச் சிறுத்தைகள் சின்னம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி வேட்பு மனு தாக்கல் முடிவதற்கு முன்பாக முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகமது யூசுப் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. எங்கள் கட்சிக்கு நட்சத்திரம் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொது சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்தியத் தேர்தல்ஆணையத்துக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தோம். ஆனால் எங்கள்கோரிக்கையை ஏற்க மறுத்து, நட்சத்திர சின்னம் ஒதுக்க முடியாது என்று கடந்தமார்ச் 29-ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது சட்ட விரோதமானது. எனவே எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு நட்சத்திரம்அல்லது வேறு ஏதேனும் ஒரு பொது சின்னத்தை ஒதுக்குமாறு சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம்உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக பரிசீலித்து மனு தாக்கல் முடிவதற்கு முன்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சட்டப்படி உரியமுடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT