சங்கரன்கோவில் நகர இந்து முன் னணி முன்னாள் செயலாளர் வெட் டிக்கொலை செய்யப்பட்ட வழக் கில், அவரது முதல் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், பாட்டத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜீவராஜ் (36). இந்து முன்னணி முன் னாள் நகர செயலாளரான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இரு முறை குண்டர் சட்டத்தில் கைதானவர். சனிக்கிழமை அதிகாலை ஜீவராஜ் கொலை செய்யப்பட்டார். சங்கரன் கோவில் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். விசார ணையில், ஜீவராஜின் முதல் மனைவி அய்யம்மாளின் தூண்டுத லில் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அய்யம்மாள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம்: ஜீவரா ஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினம் குடி போதையில் வந்து தகராறு செய்வார். அவரை நான் கண்டித்தேன்.
ஆனாலும் குடியை நிறுத்தவில்லை. இதனால் நான் அவரை பிரிந்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.என் மீதான கோபத்தில், ஷர்மிளா என்ற தேவியை 2 வது திருமணம் செய்து கொண்டார். இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். இத னால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, செயல்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.