தமிழகம்

தொழிலதிபரை அடைத்துவைத்து பிளேடால் வெட்டி சித்ரவதை: பங்குதாரர்கள், கூலிப்படைக்கு வலை

செய்திப்பிரிவு

தொழிலதிபரை அவரது அலுவலகத்திலேயே அடைத்து வைத்து பிளேடால் சரமாரியாக வெட்டி சித்ரவதை செய்த பங்குதாரர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை கோயம்பேடு ஐயப்பா நகரை சேர்ந்தவர் சாலமன். கட்டுமான தொழில் செய்து வருகிறார். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த செல்வின், நெர்வின் ஆகியோர் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். நிறு வனத்தின் லாபத்தில் தங்களது பங்கான ரூ.8 லட்சத்தை செல்வின், நெர்வின் ஆகியோர் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதை சால மன் கண்டுகொள்ளவில்லை.

இதில் கோபமடைந்த செல் வினும் நெர்வினும் அவரிடம் இருந்து பணத்தைப் பறிக்க திட்டம் தீட்டினர். அதை காட்டிக் கொள்ளாமல் சாலமனை காரில் ஏற்றிக்கொண்டு அவரது கட்டுமான நிறுவனத்துக்கு சென்றனர். கூலிப்படையினர் உதவியுடன் அவரை அங்கேயே அடைத்துவைத்தனர். பணத்தைக் கொடுக்கும்படி கூறி அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பிளேடால் கை, கால்களை சரமாரியாக வெட்டினர். ரத்தம் வழிந்து வலி தாங்க முடியாமல் சாலமன் கதறினார். ‘‘என் அக்கா வீட்டில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள்’’ என்று கெஞ்சியுள்ளார். தன் அக்காவுக்கும் போன் செய்து, ‘‘என் பார்ட்னர்கள் வந்தால் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு’’ என்று கூறினார்.

இதையடுத்து, சாலமனை அங்கேயே விட்டுவிட்டு செல்வின், நெர்வின் மற்றும் கூட்டாளிகள் நேராக சாலமனின் அக்கா வீட்டுக் குப் புறப்பட்டனர்.

இதற்கிடையில், சாலமன் அழுதுகொண்டே பேசியதால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா உடனடியாக கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். பணம் வாங்க அந்த கும்பல் தன் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதையும் கூறினார். இதையடுத்து, போலீ ஸார் அவரது வீட்டுக்கு விரைந்து வந்து காத்திருந்தனர். ஆனால், பணம் வாங்குவதற்காக வந்த செல்வின், நெர்வின் உள்ளிட்டோர் அங்கு போலீஸ் நிற்பதைப் பார்த்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், சாலமனின் கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு போலீ ஸார் சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாலமனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவ மனையில் சேர்த்தனர்.

கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான செல்வின், நெர்வின் மற்றும் கூட்டாளிகள் 3 பேரை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT