கரூர்: கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள பிரகாஷ் வீடு, அவருக்குச் சொந்தமான கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது முறையாக நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, சங்கர் வீட்டில்இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பிரகாஷுக்குச் சொந்தமான கிரானைட் நிறுவனத்தில் நேற்று அதிகாலை வரையிலும், அவரது வீட்டில் நேற்று பிற்பகல் 1.30 மணி வரையிலும் சோதனை நடைபெற்றது.
அண்ணா நகரில் உள்ள லக்கி டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் செந்தில் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஎஸ்பி அறக்கட்டளை செயல்படும் கட்டிடம் ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் நேற்று இரவு வரை சோதனை மேற்கொண்டனர்.