குகேஷ் | கோப்புப்படம் 
தமிழகம்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர்: தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "FIDE செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டுகள். உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தியுள்ளன. உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது." என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT