சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்களிடம் திமுக30 சதவீதம் கமிஷன் கேட்பதால்தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யாமல் தவிர்ப்பதாகபாஜக மாநில தலைவர் அண்ணா மலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தற்போது வரை அதுகுறித்த எந்த முயற்சிகளும் எடுக்காமல் செயலற்றுப் போய் இருக்கிறது. முதல்வர் துபாய் சுற்றுலா சென்று வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அவர் சொன்ன ரூ.6,100 கோடிமுதலீடு என்ன ஆனது என்று தெரியவில்லை.
கடந்த நிதி ஆண்டை விட, 2022-2023 நிதியாண்டில், தமிழகத்தில் நேரடி அன்னிய முதலீடு 27.7 சதவீதம் குறைந்திருக்கிறது என்றசெய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. தான், தன் மகன், தன் குடும்பம் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படும் திமுக அரசுக்கு, மாநிலத்தில் உள்ள இளைஞர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.
புதிதாக தொழில் தொடங்கவருபவர்களிடம், 30 சதவீதம் கமிஷன் வசூலிக்க முயற்சிப்பதால், தமிழகத்தில் புதிய நிறுவனங்கள்முதலீடு செய்வதைத் தவிர்க்கின்றன என்று தெரிகிறது. சமீபத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனம், தமிழகத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால், இன்றைய தினம், ஃபாக்ஸ்கான் நிறுவனம், கர்நாடக மாநில அரசுடன் 600 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,963 கோடி) முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக கர்நாடக மாநில அமைச்சர் ப்ரியங்க் கார்கே, அறிவித்துள்ளார். இதன்மூலம், 14,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செய்யவிருப்பதாகச் சொன்ன முதலீடுதான் கர்நாடகமாநிலத்துக்கு கைமாறியிருக் கிறதா? தமிழகத்தில் ரூ.1,600 கோடி முதலீடு என்று அறிவித்துவிட்டு, தற்போது கர்நாடக மாநிலத்தில் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக முதலீடு செய்ய என்ன காரணம்?
தமிழகத்தில் முதலீடு செய்ய முற்பட்ட நிறுவனம், எதனால் தமிழகத்தை விட்டுவிட்டு இன்னொரு மாநிலத்தில் முதலீடு செய்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இதனால் தமிழக இளைஞர்கள் இழந்த வேலைவாய்ப்புகளுக்கு யார் பொறுப்பு?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.