முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை 
தமிழகம்

தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்க்ததில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT