தமிழகம்

3 ஆண்டில் 13 லட்சம் பேரை காணவில்லை; மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமானது சாதாரண விஷயம் அல்ல.அவர்களைக் கண்டுபிடிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி யுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 57 ஆயிரம் பேர்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளனர். இதுசாதாரண விஷயமாக தெரியவில்லை. தமிழகத்திலும் சுமார் 57 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர்.

இதையொட்டி, தொலைந்து போன குழந்தைகளை தேடிகண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைஒன்றை தமிழக டிஜிபி அறிவித்தார். அதன்மூலம் பல குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த நடவடிக் கையை மேலும் விரிவுபடுத்தி, தொலைந்தவர்கள் பற்றிய முழு தகவலையும் வெளியிட வேண்டும். அதேபோல, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்த வேண் டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கேரளாவில் சில ஆண்டுகளாகவே சிறுமிகள் சீரழித்து கொல்லப்படும் அவலம் தொடர்கிறது.கடுமையான நடவடிக்கைதான் இதற்கு தீர்வு. அதற்கேற்ப, நீதி துறையும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பெண்கள்,சிறுமிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்துவோர் மீது சட்டத்தின் அடிப்படையை தாண்டி, தார்மிக கடமையில் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

எனவே, அனைத்து மாநில அரசுகளும், காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை இதற்காக பிரத்யேகமாக ஏற்படுத்தவேண்டும். பெண்கள், சிறுமிகள்தொலைந்துபோவது தனிப்பட்ட காரணங்களுக்காக என எடுத்துக்கொள்ளாமல், அதில் உள்ள ஆபத்தை உணர வேண்டும். மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

SCROLL FOR NEXT