கரூர்: கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது, அங்கு திரண்ட திமுகவினர் அவர்களை தடுத்து தாக்கியதுடன், அவர்களது கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர்.
இவ்வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் பூபதி, லாரன்ஸ் உள்ளிட்ட திமுகவினர் 15 பேர்கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். இதையடுத்து 15 பேரும் கரூர் கிளைசிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் திமுவினர் 15 பேர்தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நேற்று நீதிபதி ராஜலிங்கம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.