தமிழகம்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரை காவல் ஆணையரிடம் புகார்

செய்திப்பிரிவு

மதுரை: இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இதிரீஸ், செயலர் சித்திக் உள்ளிட்டோர். மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் எதிராக பேசிய காணொலி வைரலாகி வருகிறது. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஒற்றுமையை சீர் குலைக்கும் விதத்தில் பேசியுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT