தமிழகம்

தீரன் சின்னமலை நினைவு நாள்: ஈரோட்டில் ஆக.3-ல் உள்ளூர் விடுமுறை

செய்திப்பிரிவு

ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு, வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, வரும் 3-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா

மேலும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT