சென்னை: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ முறையைப் பயன்படுத்துமாறு, பொதுமக்களை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பிஎஸ்கே), அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பிஓபிஎஸ்கே) ஆவணங்களின் பரிசீலனை நேரம், தடையற்ற சரிபார்ப்பு ஆகியவற்றைக் குறைக்கத் தேவையான துணை ஆவணங்களை பதிவேற்ற ‘டிஜிலாக்கர்’ (Digilocker) செயல்முறையைப் பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையப் பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, டிஜிலாக்கர் மூலம் ஆதார் ஆவணம் ஏற்கப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிலாக்கர் மூலம் ஆதார் பதிவேற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https: / /voutu.be /MgxPGDVHib8 என்ற லிங்கில் உள்ள காணொலியைக் கண்டு அறியலாம் என சென்னை மண்டல பா ஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.