தமிழகம்

குடிமாரமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது?- பி.ஆர்.பாண்டியன்

செய்திப்பிரிவு

குடிமாரமத்துப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்று விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:

குடிமாரமத்துப் பணிகள் என்கிற பெயரில் விவசாயிகள் தங்களுடைய வயலுக்கு மண் எடுத்துக் கொண்டதும், பொதுமக்கள் மணல் எடுத்துக் கொண்டதால்தான், தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு இன்றைக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

ஆனால், தமிழக அரசு குடிமாரமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்பது தான் விவசாயிகளுடைய கேள்வியாக இருக்கிறது. எனவே, முதல்வர் பழனிசாமி வரப்பிரசாதம் என்று சொல்வதைவிட, ஆளும்கட்சிக்காரர்களுக்குதான் வரப்பிரசாதமாக அமைந்தது என்று கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT