கோப்புப்படம் 
தமிழகம்

திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் அவதி. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக தகவல்.

SCROLL FOR NEXT