தமிழகம்

தமிழக காவல் துறையில் ஏடிஎஸ்பிக்கள் 4 பேர் எஸ்பியாக பதவி உயர்வு: உள்துறைச் செயலர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறையில் கூடுதல் கண்காணிப்பாளர்கள் (ஏடிஎஸ்பி) 4 பேர், காவல் கண்காணிப்பாளர்களாக (எஸ்பி) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக உள்துறைச் செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்த உத்தரவு:

திருச்சி தமிழ்நாடு சிறப்புக் காவல் பட்டாலியன்-I, ஏடிஎஸ்பி எஸ்.ரவிச்சந்திரன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல்துறை தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி ஏடிஎஸ்பி ஹெச்.ரமேஷ் பாபு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவுதுணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அரியலூர் மாவட்ட காவல் தலைமையிட ஏடிஎஸ்பி வி.மலைச்சாமி, எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத் துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சைபர் கிரைம்பிரிவு ஏடிஎஸ்பி ஏ.சி.செல்லபாண்டி, எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் பட்டாலியன் 5-ன் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT