தமிழகம்

தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு கருணாநிதி கோரிக்கை

செய்திப்பிரிவு

தலைமை தேர்தல் ஆணையர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர, குடியரசுத் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், நாடாளுமன்றத் தேர்த லில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதிமுகவினர் தங்கு தடையின்றி வாக்காளர்களுக்கு பணம் விநியோ கிக்க வழிவகை செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதாரபூர்வ புகார் களையெல்லாம் தெரிவித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மீது நீதிமன்றத் தில் வழக்கு தொடுப்பதற்கான அனு மதியை குடியரசுத் தலைவரிடம் கேட்டு, மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி தலைமையில் திமுக எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

தேமுதிக தலைவர் விஜய காந்தும் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் மீதும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மீதும் வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், மாநில தலைமைத் தேர் தல் அதிகாரி பிரவீண்குமார் ஆகி யோர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதே குற்றச் சாட்டை குடியரசுத் தலைவரிடம் மனுவாக திமுக கொடுத்துள்ளது. அதை பாமக வரவேற்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்திருக்கிறார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகரில் செய்தி யாளர்களிடம் கூறும்போது, தேர் தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார். எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர விரை வில் குடியரசுத் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்டு, ஐஏஎஸ் அதிகாரி மேற்பார்வையில் நடந்து வருகிறது. ஆனால், அங்கே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டு கட்டண மாக ரூ.5.54 லட்சமும், பி.டி.எஸ். படிக்க ரூ.3.50 லட்சமும் வசூலிக்கப் படுகிறது.

கல்லூரியை அரசு எடுத்துக் கொண்ட பிறகு, மற்ற அரசுக் கல்லூரிகளில் என்ன கட்ட ணம் வசூலிக்கப்படுகிறதோ அதைத் தானே இங்கேயும் வசூலிக்க வேண்டும். இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்காத காரணத்தால்தான் நீதிமன்றத்திலே ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். நீதி மன்றத்தில் நல்லதோர் முடிவு காணப்படும் என்று எதிர்பார்ப்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கையில் மவுலி வாக்கம் கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார். இதே கோரிக்கைக்காக டிராபிக் ராமசாமியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த ஆட்சியினர் இந்தக் கருத்தையாவது கேட்க முன்வருவார்களா?

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை தேசிய மொழிகளாக அறிவிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் எஸ்.ராஜமாணிக்கம் வழக்கு தொடுத் துள்ளார். இதில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்பது நமது விருப்பமாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT