சென்னை: பாங்க் ஆஃப் பரோடா சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற்றது. அப்போது 93 குழுக்களைச் சேர்ந்த 1200 பெண்களுக்கு ரூ.8.43 கோடி கடன் வழங்கப்பட்டது.
கடன் முகாமில் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சரவணகுமார் தலைமை தாங்கி பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளில் பெண்கள் குழுக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதில் வங்கியின் குறிப்பிடத்தக்க சாதனையை பெருமையுடன் வெளிப்படுத்தினார்.
வங்கி பெண்களை மேம்படுத்தும் பாதையில் விடாமுயற்சியுடன் முன்னேறி வருகிறது என்றார். பரோடா வங்கியின் சென்னை புறநகர் பிராந்திய மேலாளர் லீனா கோஹைன், மெட்ராஸ் சமூக சேவை அமைப்பின் இயக்குநர் அருட்தந்தை எம்.வி.ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வங்கியின் கும்மிடிப்பூண்டி கிளையின் மூத்த கிளை மேலாளர் ஸ்ரீகாந்த் அனைவரையும் வரவேற்றார்.
மெட்ராஸ் சமூக சேவை அமைப்பை சேர்ந்த யேசுராஜ், ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி அருள்செல்வி, ஸ்ரீ கலைமகள் வித்யாலயா பள்ளி தலைவர் திருஞானம், கேரிடஸ் இந்தியா மாநில அதிகாரி ஜான் ஆரோக்கியராஜ் ஆகியோர் பாராட்டி பேசினர்.