இந்து தீவிரவாதம் விமர்சனம் தொடர்பாக கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் ஒரு கட்டுரையில் 'இந்து தீவிரவாதம்' எனக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்து தீவிரவாதம் விமர்சனம் தொடர்பாக கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம்" எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இதே மனுதாரர், கமல் நிலவேம்பு கசாயம் குறித்து அவதூறு பரப்புவதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலம் எனக் கூறியது. ஆனால், போலீஸார் முகாந்திரம் இல்லை எனக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.