தமிழகம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டி வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இதன் காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் ஏற்பட்டுள்ளவேக மாறுபாடு காரணமாகவும் இன்று முதல் ஆக.2-ம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கிளென்மார்கனில் 7 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேவாலாவில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT