தமிழகம்

கொன்னையனுக்கு தாலி கட்டிய எ.புதூர் காவல் நிலைய போலீஸார்: அம்பலத்துக்கு வரும் ராம்ஜி நகர் கொள்ளையர்களுடனான கூட்டு

அ.சாதிக் பாட்சா

போலி குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைப்பதை ராம்ஜி நகர் கொள்ளையர்களின் பாஷை யில் கொன்னையனுக்கு தாலி கட்டி அனுப்புவது எனப்படுகிறது. அப்படி யொரு சம்பவத்தை நிகழ்த்தி யுள்ளதாக எடமலைப்பட்டி புதூர் போலீஸார் மீது புகார் எழுந்து ள்ளது.

நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிக்க விரும்பும் காவல் துறை யினருக்கு திருச்சி ராம்ஜி நகர் ஒரு கற்பக விருட்சம், அதாவது பணம் காய்ச்சி மரம். ராம்ஜி நகர் கொள்ளையர்கள் திருந்த நினைத் தாலும் திருந்தவிடாமல் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது காவல் துறையினரே என குற்றம் சுமத்துகின்றனர் பொதுமக்கள்.

முக்கிய பிரமுகர்கள் பொருட் கள் திருட்டு போனதாக அல்லது பெரிய அளவில் திருட்டு நிகழ்ந் ததாக திருச்சி காவல் துறையின ருக்கு தகவல் வந்தால் உளவாளி கள் மூலம் திருட்டில் தொடர் புடைய ஆட்களை அணுகி திருடிய பொருட்களை திருப்பித் தரும் படி கேட்பார்கள். இறுதியில் காவல் துறையினருக்கும் கொள்ளை யர்களுக்கும் இடையே சிலர் மத்தியஸ்தம் பேசி ஓரளவுக்கு அல்லது முழுமையாக களவுபோன பொருட்களை ஒப்படைத்து சமரசம் செய்து கொள்வார்கள்.

பல சமயங்களில் கொள்ளையர் களிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட பணம், நகை, விலையுயர்ந்த செல்போன், லேப்டாப் ஆகிய பொருட்கள் கணக்கில் வராம லேயே காவல் துறையினர் அளவிலேயே தேங்கிவிடுமாம். சில தினங்களுக்கு முன்புகூட எ.புதூர் காவல்நிலையத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குள் அமைந் துள்ள புறவழிச்சாலையில் சிலர் இருசக்கர வாகனத்தில் ஒரு கும்பல் போலீஸ் என சொல்லிக்கொண்டு வாகனங்களில் வருபவர்களை மறித்து மிரட்டி, வழிப்பறி செய்து கொண்டிருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சில தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது. உடனே அங்கே போலீஸ் படை ஒன்று சென்றது. வழிப்பறி கும்பல் நிஜ போலீசைக் கண்டவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓடிச் சென்று தலைமறைவாகியது.

அந்த வாகனத்தை வைத்து குற்றவாளிகளை பிடிக்கத் திட்டமிட்ட காவல் துறையினர் தங்க ளுக்கே உரியபாணியில் விசாரணை நடத்தினர். ராம்ஜி நக ரைச் சேர்ந்த சிலரைப் பிடித்து விசாரணை என்கிற பெயரில் பெரும் தொகை வசூலித்தன ராம். இறுதியாக அகிலன் என்ப வரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் அகிலன் ஒரு போலி குற்ற வாளி. அதாவது ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்களின் பாஷை யில் சொல்வதென்றால் கொன்னை யனுக்கு தாலி கட்டி அனுப்பி வைத்துள்ளது போலீஸ். அகி லன் மூலம் வசூலிக்கப்பட்ட பொருட்கள், பணம் முறை யாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வில்லையாம்.

இதேபோல் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு ரோந்து காவலர் ஒருவரிடம் பிடிபட்டது. அதில் போலீஸ் என கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப் பட்டிருந்தது. அந்த வாகனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பதிவு எண் வேறொரு வாகனம் ஒன்றிற் கானதாம். அதை ஓட்டி வந்தவர் கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளரின் மருமகன் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.

இதேபோல் சில தினங்களுக்கு முன்பு 2 லாரிகள் இதே காவல் நிலைய போலீஸாரிடம் பிடிபட்டன. ஒன்று தகுந்த ஆவணங்கள் இல்லாதது. மற்றொன்று திருட்டு வாகனம். காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரிகளிலிருந்த டயர்களை சில தினங்களாக காணவில்லை.

அந்த வாகனத்தில் வந்து திருட் டில் ஈடுபட்டது யார்? என்பதை விசாரிக்காமல் இதை சாக்காக வைத்துக் கொண்டு ராம்ஜி நகர் ஆட்களைப் பிடித்து பெரும் தொகை வசூல் வேட்டை நடத்தி யுள்ளனர் எ.புதூர் காவல்நிலைய உயரதிகாரிகள் என நேர்மை யான காவல் துறையினர் புலம்பு கின்றனர்.

இதே காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு காவல் துறையினரால் திருட்டு வாகனம் என கண்டுபிடித்து 2 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதை காவல்துறை உதவி ஆய்வாளர், அவரது மகன் ஆகிய இருவரும் ஆளுக்கொன்றாக எடுத்துச் சென்று ஓட்டி வந்த விஷயம் அம்ப லத்துக்கு வந்துள்ள நிலையில், இப்போது அடுத்த பூதம் கிளம் பியிருகிறது

SCROLL FOR NEXT