தமிழகம்

மின் இணைப்புகளில் பெயர் மாற்றுவதற்கான சிறப்பு முகாம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின்வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, ஆவணங்களை பதிவேற்றும் வசதி உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக பணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து வழங்குவதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. இம்முகாம் ஒரு மாதம் நடைபெறும்.

இந்த முகாமில் பெயர் மாற்றம் உள்ளிட்ட அடிப்படை மாற்றங்களை செய்துகொள்ளலாம். அனைத்து மின்சார பிரிவு அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும். ரூ.726 செலுத்தி மின்இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT