தமிழகம்

மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கி.மகாராஜன்

மதுரை: மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.பி.எச்.ஏ.ஏ), பெண் வழக்கறிஞர்கள் சங்கம் (டபிள்யூ.ஏ.ஏ) சார்பில் உயர் நீதிமன்ற கிளை முன்பு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்.பி.எச்.ஏ.ஏ தலைவர் ஆண்டிராஜ், செயலாளர் அன்பரசு, பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி, செயலாளர் கிருஷ்ணவேணி, வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லன், வாமனன், சிவசங்கரி, சீனி, ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர்கள், மணிப்பூரில் வன்முறைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளை தடுக்கவும் மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT