தமிழகம்

நான் சொன்னது தனிப்பட்ட கருத்துகள் அல்ல; அதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்வு: தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி

செய்திப்பிரிவு

அணிகள் இணைப்பு குறித்து தான் வெளியிட்ட கருத்து குறித்து அதிமுக எம்பி மைத்ரேயன் மீண்டும் விளக்கி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

"நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக எம்.பி.,யும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என்று சூசகமாக ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். இது குறித்து, அதிமுக எம்.பி., தம்பிதுரை, "மைத்ரேயன் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தம்பிதுரை கருத்து பதிலளித்துள்ள மைத்ரேயன், "நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT