தமிழகம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: பாமக மனுவுக்கு எதிராக நல்லகண்ணு மனு தாக்கல்

செய்திப்பிரிவு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக பாமக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடு மைத் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில் தவறாகப் பயன்படுத்தப்படுவ தாகவும், இந்த சட்டத்தின் கீழ் அப்பாவிகள் பலர் கைது செய்யப்படுவதாகவும் கூறி, பாமக சார்பு அமைப்பான வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2014-ம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தில் உள்ள பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானவை என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று பாலு தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்நிலையில் பாலு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் ஆர்.நல்லகண்ணு மனு தாக்கல் செய்துள்ளார்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ம் ஆண்டில் இயற்றப்பட்டாலும், அந்த சட்டம் முழுமையாக அமல் படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடி யினத்தைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப்படுவது உள்பட தமிழ் நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக ஏராளமான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் இருந்து 85 சதவீதம் பேர் விடுதலை ஆகி விடுவதாக கூறுவது, இந்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையே காட்டுகிறது.

இந்நிலையில் இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதத்திலேயே 2014-ல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது.

இந்த வழக்கில் நானும் ஒரு எதிர்மனுதாரராக இணைந்து கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று நல்லகண்ணு தனது மனுவில் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT