தமிழகம்

சென்னை எழிலகம் அரசு கட்டிடத்தில் தீ விபத்து

செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தின் முதல் மாடியில் நண்பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

கட்டிடத்தின் வேளாண்துறை அலுவலகம் செயல்பட்டுவந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT