சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம்நேற்று கூறியதாவது: மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டாட்சியை மொத்தமாக சிதைக்கிறது. பாஜகஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டிஅரசாங்கம் நடத்த முயற்சிக்கின்றனர். சோதனை, கைது நடவடிக்கைகள் மூலம் தேசிய அளவில் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது.
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை மக்களிடையே எடுத்துச்சொல்லும் வகையில், கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநிலஉரிமை முழக்கத்தை வலுப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் நாளை (23-ம்தேதி) ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு’ நடைபெற உள்ளது.
இதில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தமிழக அமைச்சர்கள் மூர்த்தி,பழனிவேல் தியாகராஜன், தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்க பாஜக அரசு தயங்குகிறது. மணிப்பூர் சம்பவத்துக்கு மத்திய பாஜக அரசும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும். இதைவலியுறுத்தி இன்றுமுதல் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பொது சிவில் சட்டத்தை அரசியல்ஆதாயத்துக்காக செயல்படுத்தக் கூடாது. இந்த சட்டத்துக்கு எதிராகசென்னையில் ஆக.9-ம் தேதி கருத்தரங்கம் நடத்தப்படும். இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொள்கிறார். பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.