தமிழகம்

நீயும் பொம்மை நானும் பொம்மை.. தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை | பேசும் படங்கள்

எல்.சீனிவாசன்

நீயும் பொம்மை நானும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை

அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

இது வெறும் பாடல் வரிகள் அல்ல. சற்றே அந்த வரிகள் மீது நம் சிந்தனையைப் படரவிட்டால் தத்துவங்கள் பல கிடைக்கும். இந்தப் பாடலைப் பாடியதன் மூலமே ஜேசுதாஸ் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார். 1964 ஆம் ஆண்டு எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பொம்மை' திரைப்படத்தில்தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எழுதியவர் வி.லஷ்மணன்.

இப்போது இந்தப்பாடல் நினைவுக்கு வருவதற்குக் காரணம் எல்.சீனிவானின் இந்தப் புகைப்படங்கள். இடம்: சென்னை மயிலாப்பூர்.

பளபள பாக்கெட்டுகளில் விற்கும் பொருட்களை, அவற்றில் அச்சிட்ட பணத்தைக் கொடுத்து வாங்கும் நாம். இப்படியான உழைப்பாளிகளிடம் பேரம் பேசாமல் வியாபாரம் செய்வோமேயானால் நாம் பொம்மையல்ல!

SCROLL FOR NEXT