சென்னை: விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கள்கிழமை முகூர்த்த நாள் என்பதை கருத்தில்கொண்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து பிற முக்கிய இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல, ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.