மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 106 பேர் தங்களது துப்பாக்கிகளை போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் மேற்பார்வையாளர் (பொது) போர் சிங் யாதவ், (7200983704), தேர்தல் மேற்பார்வையாளர் (காவல்) கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் (9894582390), தேர்தல் செலவின மேற்பார்வையாளர் வாவல் வைபவ் பாலாசாகேப் (7200964217) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன்படி மதுராந்தகத்தில் தற்போது 106 பேர் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை வருவாய்த் துறை மற்றும் காவல் துறையிடம் வழங்கியுள்ளதாக மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இடைத்தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.