தமிழகம்

தமிழகத்தில்தான் பஸ் கட்டணம் குறைவு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதன்கிழமை தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்க குறிப்பில் கூறியி ருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி பஸ் கட்டணம் சீரமைக் கப்பட்டன. இதன் பிறகும், நாட்டிலேயே குறைந்த பஸ் கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாட்டில் ஒரு கி.மீக்கு 42 பைசா வசூலிக்கப்படுகிறது.

இதுவே, ஆந்திராவில் 59 பைசா வும், கேரளாவில் 64 பைசாவும், கர்நாடகாவில் 59.75 பைசாவும், மராட்டியத்தில் 90 பைசாவும், குஜராத்தில் 58.41 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர, விரைவு, சொகுசு, குளிர்சாதனம், வால்வோ குளிர் சாதனம் ஆகிய பஸ் கட்டணத்தை ஒப்பிடும் போதும், தமிழகத்தில் தான் குறைவாக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்

SCROLL FOR NEXT