சென்னை: திருவள்ளூர் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (19) சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் வேளச்சேரி- அரக்கோணம் மின்சார ரயிலில் நண்பர்களுடன் சென்றபோது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். இது தொடர்பான தகராறில் மாணவர்கள் சிலர் ராஜேஷ் உள்ளிட்டோர் மீதும், ரயில் மீதும் கற்களை வீசினர். இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி,கும்மிடிப்பூண்டி ரவிச்சந்திரன்(18), லோகேஷ்(18) மற்றும் மஞ்சூரை சேர்ந்த 17 வயது மாணவர் என 3 மாணவர்களை நேற்று கைது செய்தனர்.