தமிழகம்

மு.க.அழகிரி கல்லூரிக்கு தற்காலிக அங்கீகாரம்: அண்ணா பல்கலை.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

முன் னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தயா பொறியி யல் கல்லூரி மாணவர் சேர்க் கைக்கு 7 நாளில் அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2011-12 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கும் மாணவர் கலந்தாய்வு பட்டியலில் தயா பொறியியல் கல்லூரி பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் 2013-14 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி கல் லூரி நிர்வாகம் அண்ணா பல் கலைக்கழகத்துக்கு விண்ணப் பித்தது. அந்த விண்ணப்பத்தை கல்லூரி கட்டிடத்தின் உறுதித் தன்மை சான்று, மின்வசதி குறித்த சான்று, சுகாதார ஆய்வாளர் சான்றி தழ்கள் இல்லை என்றும் கல் லூரி நிலம் தொடர்பாக ஆட்சேபம் உள்ளதையும் காரணம் காட்டி விண்ணப்பத்தை அண்ணா பல் கலைக்கழகம் 2013 ஜூலை 15-ல் நிராகரித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கல்லூரி தரப் பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு அளித்த உத்தரவில், ‘கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன் சில் கல்லூரிக்கு அனுமதி வழங்கி யுள்ளது. எனவே, கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எந்த தடையும் இல்லை.

எனவே, 2013-14 கல்வி ஆண் டுக்கு அங்கீகாரம் கேட்டு கல்லூரி அளித்த விண்ணப்பத்தை, 2014-15 கல்வி ஆண்டுக்கு அங்கீ காரம் கேட்டு வழங்கப்பட்ட விண் ணப்பமாகக் கருதி, 7 நாளில் மாண வர்களை சேர்க்க தற்காலிக அங்கீ காரம் வழங்கி அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட வேண்டும். பொறி யியல் கலந்தாய்வில் பொறியி யல் கல்லூரிகள் பட்டியலில் தயா பொறியியல் கல்லூரி பெயரையும் சேர்க்க வேண்டும்’ என்றார்.

SCROLL FOR NEXT