அயல் நாட்டு மதுபானம் விற்பனைக் கடை 
தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 4,500க்கு மேற்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலை குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT