சென்னை: மத்திய மருந்து கட்டுப் பாட்டுத்துறை தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்ட அறிவிப்பு: உலக சுகாதார அமைப்பு சார்பில் அண்மையில் மருந்து தொடர்பான வெளியிடப்பட்ட எச்சரிக்கை செய்தியில், சளிமற்றும் இருமலுக்காக பயன் படுத்தப்படும் ‘போல் கோடின்’ என்ற மருந்தை உட்கொண்டவர்களுக்கு, அதற்கு அடுத்த 12 மாதங்களில் மயக்கவியல் மருந்தை செலுத்தும்போது கடுமையான பக்க விளைவு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு மருந்து ஒழுங்குமுறை ஆணையங்கள் அந்த மருந்தை திரும்பப்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக அண்மையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து பல் வேறு முடிவுகள் எட்டப்பட்டன. அதன்படி மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினர், நோயாளிகளிடம் ‘போல்கோடின்’ மருந்துக்கு மாற்றாக வேறு மருந்தை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்க வேண்டும்.
நோயாளிகளும் அந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையின்றி உட் கொள்ளுதல் கூடாது. அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள், ‘போல் கோடின்’மருந்தை கடந்த 12 மாதங்களுக்குள் எடுத்திருந்தால், அது தொடர்பாக மருத்துவர்களி டம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.