தமிழகம்

நவம்பர் 6,7 தேதிகளில் சென்னையில் மீண்டும் தீவிர மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்

செய்திப்பிரிவு

நவம்பர் 6,7 தேதிகளில் சென்னையில் மீண்டும் தீவிர மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று காலை 11 மணியளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman), "இன்று விட்டுவிட்டு மழை பெய்யும். இடைவெளி விட்டுப் பெய்யும் என்பதால் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போதைக்கு வானிலை அச்சுறுத்தும் வகையில் இல்லை.

தற்போது நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னைக்கு இன்னும் மழை வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 6,7 தேதிகளில் சென்னையில் மீண்டும் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் மழை..

தென் தமிழகம் மற்றும் மேற்கு பகுதியின் உள்மாவட்டங்களிலும் மழை வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக தெற்கு, மேற்கு மாவட்டங்களில் மழை வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

உளுந்தூர்பேட்டை, பொள்ளாச்சி, சிவகிரி பகுதிகளுல் இன்று மழை பெய்யும்.

இலங்கையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது சற்றே மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதன்முறையாக ஈரப்பதம் மேற்குநோக்கி நகந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலையிலும் இன்று மழை பெய்யும்.

SCROLL FOR NEXT