தமிழகம்

திருக்குறளை சொன்னது மின்துறை அமைச்சர் அல்ல: பேரவையில் முதல்வர் நகைச்சுவை

செய்திப்பிரிவு

திருக்குறளை சொன்னது திருவள்ளுவர்; மின்துறை அமைச்சர் அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா நகைச்சுவையாக கூறினார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், அரூர் கல்லூரி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார். அவர் பேசும்போது, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, ‘இதை மின்துறை அமைச்சர்கூட அடிக்கடி சொல்வார்’ என்றார்.

அப்போது முதல்வர் குறுக்கிட்டு,‘‘திருக்குறளைச் சொன்னது திருவள்ளுவர். மின்துறை அமைச்சர் அல்ல’’ என்று நகைச்சுவையாக கூறினார். உடனே அவையில் சிரிப்பலை எழுந்தது. தவறைத் திருத்தியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் பழனியப்பன்.

SCROLL FOR NEXT