தமிழகம்

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தமீமுன் அன்சாரி கருத்து

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: பொது சிவில் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, என மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி கூறினார்.

ராஜபாளையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை சாதி, மத பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இது, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் உள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கைதிகளை விடுதலை செய்தால் நாட்டில் கலவரம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தவறு செய்கிறதா அல்லது அதிகாரிகள் அரசை தவறாக வழி நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை.

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இச்சட்டம் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்துக்கும் எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT