தமிழகம்

சென்னையில் தெரிந்த சந்திரயான்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால், அங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்களை சென்னையில் இருந்து தெளிவாக காண முடியும்.

சந்திரயான்-3 ஏவப்படுவதை பார்க்க, நேற்று பிற்பகல் 2 மணியில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் மாடிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில விநாடிகளில், ராக்கெட் உயரே பறந்து செல்வது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தெளிவாக தெரிந்தது. தீப்பிழம்பை கக்கியபடி ராக்கெட் பறந்து செல்வதை பார்த்ததும், பொதுமக்கள் கைதட்டியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT