“விதிமுறைகளுக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பயணி களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் இந்த உத்தரவு நிறைவேற் றப்படவில்லை. ஆகவே, தமிழக தலைமைச் செயலாளர், போக்கு வரத்துத் துறை செயலாளர், போக்கு வரத்து ஆணையர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்த ரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத் துக்காக ரூ.91 லட்சத்து 35 ஆயிரத்து 110 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 40 ஷேர் ஆட்டோக்களின் பெர்மிட் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், 13 ஆட்டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்பட்டதாகவும் போக்கு வரத்து ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் சார்பில் நீதிமன் றத்தில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
இவ்வளவு அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதிலிருந்து, விபத்துகளுக்கு வித்திடும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன என்பது தெரிகிறது. ஆகவே, வெறுமனே அபராதத் தொகை வசூலிப்பது மட்டும் போதாது. விதிமுறைகளை மீறும் ஷேர் ஆட்டோக்களின் பெர்மிட் களை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முந்தைய நீதிமன்ற உத்தரவை யடுத்து அரசுத் தரப்பில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை கோரும் இந்த மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்