சென்னை: சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. லண்டனில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்துலண்டன் புறப்படும்.
நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக அதிகாலை 4.30 மணிக்கு விமானம் சென்னைக்கு வந்தது. சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்காக 276 பயணிகள் காத்திருந்தனர். ஆனால், லண்டன்புறப்பட வேண்டிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
பொறியாளர்கள் முயற்சி செய்தும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, லண்டன் செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், ஜூலை11-ம் தேதி காலை விமானம் லண்டன் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.