தமிழகம்

முன்னாள் அமைச்சர் நாசர் அப்போலோவில் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் கடந்த மே மாதம் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் அவர், கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT