தமிழகம்

ஓசூர் தனியார் நிறுவனத்தில் பிரதமர் விமானம் பராமரிப்பு: காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு

செய்திப்பிரிவு

ஓசூர் தனியார் விமான தயாரிப்பு நிறு வனத்தில், பிரதமர் விமானத்தில் பரா மரிப்புப் பணிகள் நடந்து வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப் புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் விமானங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு குட்டி விமானம், ஆளில்லா விமானம் மற்றும் அதன் உதரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விமானங்கள் பழுதுபார்க்கும் பணிகளும் இங்கு நடைபெறுகின்றன. இந்த நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திவரும் விமானம் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. 10 முதல் 15 நாட்கள் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படும். இதையொட்டி பேளகொண்டப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் இருந்த போதும், ஒரு முறை விமானம் பராமரிப்புப் பணிகளுக்கு ஓசூர் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT