கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் பிறந்த நாளை முன்னிட்டு மேயர் சுந்தரிராஜா 1,200 கிலோ தக்காளியை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் உள்ளிட்டோர். 
தமிழகம்

திமுக பிரமுகர் கதிரவன் பிறந்தநாள் - 1,200 கிலோ தக்காளி இலவசமாக கடலூர் மக்களுக்கு விநியோகம்

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் முதுநகரில் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் மகனுமான கதிரவன் பிறந்த நாளை முன்னிட்டு 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவசமாக 1,200 கிலோ தக்காளி விநியோகம் செய்யப்பட்டது.

கடலூர் முதுநகர் பேருந்து நிலையம் அருகில் இந்நிகழ்வை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்து, தக்காளியை விநியோகம் செய்தார். தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்கள் பயன்பெற, மாவட்ட பொருளாளரின் பிறந்த நாளில் இதை இலவசமாக வழங்குவதாக நிகழ்வில் பங்கேற்ற திமுகவினர் தெரிவித்தனர்.

மக்களும் அந்த இலவச தக்காளியை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தொடர்ந்து கதிரவன் பிறந்த நாள் விழாவை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

இக்கொண்டாட்ட நிகழ்ச்சி களில் கடலூர் மாநகர திமுக செயலாளர் கே எஸ்.ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட தகவல் தொழில் நுட்பு பிரிவு வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT