தமிழகம்

தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்

செய்திப்பிரிவு

சென்னை: தான்சானியா நாட்டில் உள்ள சான்சிபார் பகுதி ஓர் அரை தன்னாட்சி பிரதேசமாகும். சான்சிபாரில் சென்னை ஐஐடி வளாகம் அமைக்க மத்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடி, தான்சானியா சான்சிபாரின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி வின்இ ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வின் போது, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “சென்னை ஐஐடியின் சான்சிபார் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உயர் கல்வியைச் சர்வதேச மயமாக்கலை ஒட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம்” என்றார்.

SCROLL FOR NEXT