சென்னை: தமிழகத்தில் நேற்று 78 சார்பதிவாளர்களை மாற்றி பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருநெல்வேலி மண்டலங்களை சேர்ந்த மாவட்ட பதிவாளர்கள் 36 பேரையும் அதிரடியாக மாற்றம் செய்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 78 சார் பதிவாளர்களையும் கூண்டோடு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம் (புதிய இடம் அடைப்புக்குறியில்):
திண்டிவனம், வளத்தி சண்முகம் (நீலாங்கரை), குன்றத்தூர் வி.எஸ்.முருகன் (திண்டிவனம் வளத்தி), திண்டிவனம் எஸ்.வெங்கடேஷ் (குன்றத்தூர்), சென்னை அசோக் நகர் ஜெ.சரவணன் (திருவெண்ணை நல்லூர்), ஆவடி ச.மல்லிகேஸ்வரி (நாகப்பட்டினம்), சுங்குவார்சத்திரம் ரா.செல்வி (கரூர் வேலாயுதம் பாளையம்), திண்டிவனம் சத்தியமங்கலம் திருமாறன் (திருவொற்றியூர்), வடசென்னை கொன்னூர் மு.அன்பழகன் (திண்டிவனம் சத்தியமங்கலம்).
செய்யூர் வீ.பாலாஜி (வந்தவாசி), செங்குன்றம் மு.மகேஷ் (புதுக்கோட்டை குளத்தூர்), சென்னை ஆலந்தூர் க.செ.செல்வகுமரன் (கடலூர்), பொன்னேரி ஜி.செல்வ விநாயகம் (சென்னைதுணை பதிவுத்துறை அலுவலகம்), பம்மல் அ.மீனாட்சி (பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகம்).
மயிலாடுதுறை பாக்கியலட்சுமி, (தென்சென்னை இணை சார்பதிவாளர்), செய்யார் கண்ணமங்கலம் த.மணிகண்டன், (சென்னை தி.நகர்), செய்யார் களம்பூர் ந.சித்ரா (புரசைவாக்கம்), தஞ்சாவூர் பூதலூர் மு.கவிதாராணி (பெரியமேடு), கடலூர் புதுப்பேட்டை ஜி.காந்தி கனிமொழி (கோடம்பாக்கம்), அரியலூர் புள்ளம்பாடி சீ.பார்த்தசாரதி (மயிலாப்பூர்).
செய்யாறு எம்.ஜெயராஜ், (திருவல்லிக்கேணி), திருவாரூர் கூத்தாநல்லூர் எம்.கணேஷ் கார்த்திகேயன் (ராயபுரம்), விருத்தாசலம் கம்மாபுரம் பி.பிரியங்கா (சென்னை சவுகார் பேட்டை), மன்னார்குடி மீ.மஞ்சு (சேலையூர்).
இவ்வாறு தமிழகத்தில் மொத்தம் 78 சார் பதிவாளர்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.