சென்னை: சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் அண்ணா மேம்பாலம் உள்பட 33 மேம்பாலங்கள் உள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்தது. கரோனாகாலங்களில் சாலையை பயன்படுத்துவோரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை அவை மூடப்பட்டன.
பிறகு மேம்பாலங்களில் விபத்துகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் இரவில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் இந்த அமைப்பு தொடர அனுமதியளிக்கப்பட்டது. பல்வேறு அலுவலக நேரங்கள் காரணமாக இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால் இரவு நேரங்களிலும் மேம்பாலங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக தற்காலிக நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.